Tuesday, June 21, 2011

Hakeem's Speech at YMMA Convention

எம்.ஏ.எம்.நிலாம்  : போருக்குப் பின்னரான சூழ்நிலையில் சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம்கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்த்திருக்க முடியாதெனவும் சமூக சேவை இயக்கங்களும் புத்திஜீவிகளும் இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 61 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று முன்தினம் ஞாயிறன்று கொழும்பு பட்டயக்கணக்காளர் நிறுவனக் கேட்போர் கூடத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது. நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வை.எம்.எம்.ஏ.கிளைகளின் பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இலங்கை சட்டமன்றத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; தூர நோக்கும், தூய போக்கும் கொண்ட மர்ஹும் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் 1950 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வை.எம்.எம்.ஏ.என்ற இந்த இஸ்லாமிய வாலிபர் இயக்கம் நாடு பூராகவும் கிளைகளை அமைத்து வியாபித்துள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் தேசியவாத அலை நாட்டில் பரவலாக வீசிய போது மிகவும் துணிச்சலுடன் சரியான தீர்மானத்தை சரியான நேரத்தில் மேற்கொள்வதில் அறிஞர் அஸீஸ் சிறந்து விளங்கினார். உத்தியோகபூர்வ மொழி என்ற விவகாரம் தலைதூக்கிய போது அறிஞர் அஸீஸ், முஸ்லிம்களை பொறுத்தவரை தாய்மொழியான தமிழைக் கற்பதிலேயே ஆர்வம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவை ஒரு சமூகம் சார்ந்த இயக்கமாக இருந்த போதிலும் நாட்டில் சகல இனங்களுக்குமிடையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதில் முன்னின்று பணியாற்றி வருகின்றது. 1980 ஆம் ஆண்டுகளில் நாட்டில் வன்செயல்கள் இடம்பெற்றதோடு, ஆயுதப் பேராட்டமும் ஆரம்பமானது. அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியது.

இவற்றின் விளைவாக நாட்டில் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பில் தளம்பல் நிலைமை ஏற்பட்டது. இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தது. இவ்வாறான சூழ்நிலையில் வை.எம்.எம்.ஏ.(முஸ்லிம் வாலிபர் பேரவை) போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகள் (இணிட்ட்தணடிtதூ ஆச்ண்ஞுஞீ Oணூஞ்ச்ணடித்ச்tடிணிணண்) நாட்டில் சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளன.

வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் பாவனைக்கெதிரான செயல்திட்டங்கள், அனர்த்த நிவாரண உதவிகள் போன்றவற்றை முஸ்லிம் வாலிபர் பேரவை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்திருக்கின்றது. முஸ்லிம்களை பொறுத்தவரை துரதிஷ்டவசமாக சிந்தனை ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான பலவீனங்களை மேற்கு நாடுகள் சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கின்றனர். இஸ்லாத்தில் வகுப்பு வாதம், பிரிவினை வாதம் என்பன இல்லை. அவ்வாறே மேற்கு நாடுகளில் கூறப்படுவது போல இஸ்லாத்தில் தீவிரவாதமும் இல்லை.

அண்மையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் சென்றிருந்த பொழுது இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை நேரில் காண முடிந்தது. முல்லைத்தீவில் மீள்குடியேற முன்வந்துள்ள 400 முஸ்லிம் குடும்பங்கள் கழிவறை வசதிகள் கூட இன்றி, ஓலையால் வேயப்பட்டு, தகரத்தாலும் தார்போலினாலும் அமைக்கப்பட்ட தற்காலிக இருப்பிடங்களில் மின்சார வசதிகள் கூட இன்றி வாழ்ந்து வருவதைக் கண்டேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரதேசங்களில் மீள்குடியேறியோரில் வயது முதிர்ந்தோர் குடிசைகளை அமைத்துக்கொண்டு, போர்வையால் போர்த்திக்கொண்டு இரவு வேளைகளில் யானைகளிலிருந்தும் ஏனைய வனவிலங்குகளிலிருந்தும் பயிர்ச்செய்கையை பாதுகாத்துக் கொள்ள காவலிருப்பதையும் கண்டேன்.

பாதிக்கப்பட்ட இவ்வாறான மக்களுக்கு உதவ சமூகம் சார்ந்த இயக்கங்கள் முன்வருமானால் பெரிதும் வரவேற்கத்தக்கது.மத்திய கொழும்பில் நகர அபிவிருத்திக்காக சேரிப்புறங்களில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்படுவது பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கிறது. அது பற்றி ஒரு தவறான பார்வையிருக்கிறது. இது தொடர்பாக நான் அண்மையில் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்து கலந்துரையாடினேன். இதனால் மக்கள் பீதியடைந்திருப்பதாகவும் இவ்வாறான செயல்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்பதாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு அவை பற்றிய போதிய தெளிவும் விளக்கமும் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவரிடம் நான் எடுத்துரைத்தேன். எனது வேண்டுகோளை அவர் கவனமாக செவிமடுத்தார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

Monday, June 6, 2011

வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்கை ஒன்றின் ஊடாக அணுகப் படவேண்டும்

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் இமேல்டா சுகுமார் மீள் குடியேற்றம் Relocation என்பது வேறு மீள் குடியமர்வு Resettlement  என்பது வேறு அரசாங்கதுடன் மீள் குடியேற்றம் Relocation தொடர்பான கொள்கை ஒன்று இல்லை என்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்றார்கள் (20 வருடங்களுக்கு முன்னர் விடுதலை புலிகனால் பலவந்தமாக வெளியேற்றபட்டார்கள்) என்றும் ஐந்து குடும்பமாக சென்றவர்கள் இன்று பதினைந்து இருபது குடும்பங்களாக திரும்பி வருவார்கள் ஆனால் அப்படிவரும்போது அது மீள் குடியமர்வுவாக Resettlement பார்க்கமுடியாது அது மீள் குடியேற்றம் Relocation என்று தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களின் வீடுகள் ஐந்து ஆறு பேர்ச் காணிகளில்தான் அமைத்துள்ன  அதை இன்று பல குடும்பங்கள் பங்கு போடமுடியாது இதனால் அவர்களுக்கு புதிய காணிகளை வழங்கவேண்டும் யாழ் நகர் பகுதியில் பெரிதாக காணிகள் இல்லை  அவர்கள் தாம் நகர் பகுதில்தான் வாழ்ந்தோம் அதனால்  விரிவாக  எமக்கு நகர பகுதியில் காணிகள் தரப்படவேண்டும் என்று தெரிவிக்கின்றனர் அனால் காணிகள் நகர பகுதியில் இல்லை அரசாங்கத்திடம் மீள் குடியேற்ற கொள்கை ஒன்று இல்லை அதனால் எமக்கு அரசாங்க அறிவுறுத்தல் வழங்கபடாமல் எம்மால் மீள் குடியேற்ற முடியாது என்று அததரண செய்திக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கென்று சொந்த காணியில்லை என்பதை அவர்களே தெரிவிகின்றனர் அரசாங்கத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் வகுப்படவில்லை எனவும் தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது மீள்குடியேற்றம் அல்ல எனவும் மீள்குடியமர்வே தற்போது இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாவகுழியில் சிங்களவர்கள் வந்து அமர்ந்திருப்பது காணி அத்துமீறல் Encroachment என்றும் தெரிவித்துள்ளார்.
அரசிடம் முஸ்லிம் மீள் குடியேற்றம்  தொடர்பாக கொள்கை ஒன்று இல்லை என்பதி கடந்த இரண்டு வருடங்களாக தெரிவித்து வருகின்றது என்பது குறிபிடத்தக்கது
அரசிடம் முஸ்லிம் மீள் குடியேற்றம்  தொடர்பாக கொள்கை ஒன்று இல்லை எமது  முந்திய கட்டுரைகள் :



Sunday, June 5, 2011

குடாநாட்டில் மூடப்பட்டுக் கிடக்கும்தொழிற்சாலைகளை மீள இயக்கும் சாத்திய ஆய்வுகளில் செக் குடியரசு

யாழ். மாவட்டத்தில் செயலிழந்து போன தொழிற்சாலைகளை மீள இயக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து செக்குடியரசின் பிரதி அமைச்சர் தோமஸ்டப் தலைமையிலான குழு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆய்வு செய்தது.
 
இலங்கைக்கான செக் நாட்டு மிலோசவ் ஸ்டசெக், பிரதி அமைச்சரின் ஆலோசகர் ரூடோல்வ் ஹிக்கி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இவர்களுடன் இலங்கையின் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.  குழுவினர் முதலில் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியை அவரது அலு வலகத்தில் சந்தித்தனர்.
 
யாழ். மாவட்டத்தில் உள்ள நிலப்பயன்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக அப்போது கலந்துரையாடப்பட்டது. யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரையும் செக் குழுவினர் சந்தித்தனர். அரைமணி நேரம் நீடித்த இந்தச் சந்திப் பின் போது, யாழ். மாவட்டத்தில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை மீள இயக்குவதுக்கான வாய்ப்புக் குறித்து ஆராயப்பட்டது.
 
புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், மாவட்டத்தின் மீள் குடியமர்வு நிலைமைகள், அபிவிருத்தி என்பன குறித்தும் வந்திருந்த குழுவினரால் கலந்துரையாடப்பட்டது.
 
"செக் குடியரசு அமைச்சரும் வந்திருந்தவர்களும் மாவட்டத்தில் தொழிற்சாலைகளை மீளவும் இயங்கச் செய்வதுக்கான சாத்தியங்கள் குறித்தே அதிக ஆர்வம் காட்டினர்'' என்று அரச அதிபர் கூறினார்.
 
வீதி, மின்சாரம், நீர் விநியோகம் ஆகிய துறைகளில் அபிவிருத்திப் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் அவற்றை மேம்படுத்துவதற்கான உதவிகள் அவசர தேவையாக இருக்கின்றன என்று அரச அதிபர், குழுவினரிடம் வலியுறுத்தியுள் ளார்.                                    

யாழ்ப்பாண வன்முறை இடம்பெற்று 30 ஆண்டுகள்

இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கு முன், 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வன்செயல்கள், இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்தது.
நாட்டில் அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்துக்கான ஒரு முன்னெடுப்பு என்று கூறப்பட்டு மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கான தேர்தல்களை ஜூன் மாதம் நான்காம் தேதி நடத்த இலங்கை அரசு முன்வந்தது.
அப்போது கொழும்பில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளர்களை வடக்கே யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைத்து தேர்தலில் தமக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்த முயன்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன.
அந்தத் தேர்தலில் போட்டியிட்ட, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினர் நாச்சிமார்கோயிலடி என்ற இடத்தில் ஒரு தேர்தல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த நூற்றுக்கும் அதிமான போலீசார் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதன்பிறகு நடந்தேறிய வன்செயல்களில், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், யாழ்ப்பாண நூலகம், பூபாலசிங்கம் புத்தகக்கடை உட்பட பல இடங்கள் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
அந்த வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் யாழ் கிளை தீவிர முயற்சிகளை எடுத்தது என்று அந்த அமைப்பில் அப்போது உறுப்பினராக இருந்த சீலன் கதிர்காமர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜூன் மாதம் முதல் வாரம் இடம் பெற்ற இந்த வன்செயல்கள் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைத்தது என்று கூறும் கதிர்காமர், அந்த வன்செயல்களே 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்னோடியாக இருந்தது என்றும் கூறுகிறார்.
யாழ்ப்பாண நூலகம்
யாழ்ப்பாண நூலகம்
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் இடம்பெற்ற வன்செயல்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால், அதிகாரப்பகிர்வு நடைமுறையில் செயல்படுத்தப்பட ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் சீலன் கதிர்காமர் கூறுகிறார்.
தற்போதைய சூழலில், அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மக்கள் விழிப்புணர்வுடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் மக்கள் இதை மனதில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கருத்து வெளியிடுகிறார்.
யாழ்ப்பாண மக்களை கல்வி ரீதியில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டியதே தற்போது முக்கியமாக தேவைப்படும் நடவடிக்கை எனவும் கூறும் அவர், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகளின் தரமும் குறைந்து காணப்படுகிறது எனவும் கூறுகிறார்.

Saturday, June 4, 2011

யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் விசேட ஊடக அறிக்கை, மற்றும் பிரதிநிதிகள்கூட்ட அறிக்கை


இன்று சனிக்கிழமை 4 ஜூன் 2011 அன்று மீள்குடியேற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுக்கூட்டம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுகுணாரதி தெய்வேந்திரம் தலைமையில் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் காலை 10.30 மணி முதல் மிகச்சிறப்பாக இடம்பெற்றது, இந்நிகழ்விற்கு நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர், இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அது சார்ந்து எழுகின்ற நடைமுரைப்பிரச்சினைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. 

இங்கு கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர் சுகுணாரதி தெய்வேந்திரம்: மீள்குடியேற்றம் ஒரு முறைதான் இடம்பெறும், அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்களை மக்களுக்குச் சென்றடையும் ஒரு பணியினைத்தான் நாம் மேற்கொள்கின்றோம், குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய விடயத்தை எடுத்துக்கொண்டால் பதிவுகளை மேற்கொண்ட பலர் இங்கே நிரந்தரமாக குடியிருக்கவில்லை, அவர்கள் பலர் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு சென்றுவிட்டனர், எனவே நிவாரண நடவடிக்கைகளுக்கு இது பாதிப்பையேற்படுத்துகின்றது, ஒரு சிலர் இதனை தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துகின்றனர், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நிகழ்ச்சித்திட்டம் எவ்வித அரசியல் சார்பும் அற்றது என்பதை மக்களுக்கு மிகத்தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

உலக உணவுத்திட்டத்தின் உதவிகள்,யூ.என்.எச்.சீ,ஆர் உடைய உதவிகள், இப்போது வழங்கப்படும் கூறைத்தகடுகள் என்பன முறைகேடாகப் பாவிக்கப்பட்டதன் விளைவாகவே நிறுத்தப்பட்டன, நான் இங்கே அவ்வாறான முறைகேடுகளுக்கு காரணமான அரசியல்வாதியை பெயர் கூறி குறிப்பிட விரும்பவில்லை, எனவே மக்கள் எங்களுடன் ஒத்துழைத்தால் மீள்குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தை எமக்கு சீராக மேற்கொள்ள முடியும்.

தேவைகள் எல்லைகள் அற்றவை, வளங்களோ மட்டுப்படுத்தப்பட்டவை, அதிலும் அரச உதவிகள் மேலும் குறைவானவை எனவே உரியவருக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதில் நாம் கவனமாக செயற்படுகின்றோம், முதன்மைப்படுத்தல் அடிப்படையில் பட்டியல்களை நான் நேரடியாக களத்துக்கு விஜயம் மேற்கொண்டு தீர்மானிக்கின்றேன், இதனை ஒரு சிலர் விரும்புகிறார்கள் இல்லை, இதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, தேவையுள்ளவனுக்கு கொடுத்த பின்னரே அடுத்தவனுக்கு கிடைக்கும்.

புத்தளத்தில் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இங்கே உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்பதை மக்களாகிய நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள், இது அரசாங்கத்தின் பொதுக்கொள்கையாகும். இப்போது ஒரு தொகுதி மக்களுக்கு கூறைத்தகடுகள் விநியோகிக்கப்பட்டன, அடுத்தடுத்த கட்டங்களில் ஏனையோருக்கும் வழங்கப்படும், ஆனால் இதனை ஒரு சிலர் தவறாகப் புரிந்துகொண்டு குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

கதீஜா மகாவித்தியாலயத்தில் தங்கியிருப்போருக்கு ஆரம்பத்தில் நாம் கூரைத்தகடுகளை வழங்கினோம், அவர்கள் அவ்வாறான நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேற வேண்டும், மீண்டும் முகாம் வாழ்க்கை தேவையில்லை என்றே நாம் அவ்வாறு செய்தோம் ஆனால் அவர்கள் இன்னும் அதே பாடசாலையில் இருக்கின்றார்கள், அவர்களுள் சிலருக்கு புத்தளத்திலும் வீடுகள் இருக்கின்றன என அறியக்கிடைக்கின்றது, இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.

மக்கள் சரியான உண்மையான தரவுகளை எமக்கு முன்வைத்தால், நாம் உதவித்திட்டங்களை வழங்குவது சீராக இருக்கும், இதற்கு மக்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும், நாம் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்துடன் நெருங்கி கடமையாற்றுகின்றோம், அவர்கள் எங்களுடன் சுமூகமாக நடந்து கொள்கின்றார்கள்,உண்மையான தேவையுள்ள மக்களுக்கு நாம் உதவத் தயாராகவே இருக்கின்றோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு எமக்கு வேண்டும். எனக்குறிப்பிட்டார், 

காணிகள் இருப்போருக்கான வீட்டுத்திட்டத்தில் நான் பல  முஸ்லிம்களை நான் இணைத்துள்ளேன், வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தும்போது காணிகள் இருப்போருக்கு நான் முன்னுரிமை வழங்கி வீட்டுத்திட்டங்கள் அவர்களைச் சென்றடையச்செய்வேன். எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன்பின்னர் பொது மக்களுக்கான கேள்விகளுக்கு நேரம் வழங்கப்பட்டது, 

அதன்போது பிரதேச செயலாளர் இனப்பாகுபாட்டுடன் நடந்துகொள்கின்றார் என்றும், முஸ்லிம்களைப் புறக்கணிக்கின்றார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன, இவற்றை மறுத்த பிரதேச செயலாளர், குறுக்குவழிகளில் உதவிகளைப்பெற முயலும் பலரை நான் தடுத்துள்ளேன், எனவே அவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எம்மீது வைக்கின்றார்கள், நான் எல்லோரையும் சமமாகவே மதிக்கின்றேன், அவ்வாறு இனத்துவேசத்துடன் நடந்துகொண்டேன் என்பதற்கு ஒரு ஆதாராத்தையும் உங்களால் முன்வைக்க முடியாது.

வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டன, அப்போது கிராமிய மட்டத்திலான மீள் எழுச்சித்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது, கிராமிய மட்டத்திலான வளவாளர்களை இனங்கண்டு அவர்களூடாக குறித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்ற விடயம் பேசப்பட்டது, அதற்கு பிரதேச செயலாளர் உடனடியாக அதனை அமுல்படுத்துவதாக இணக்கம் தெரிவித்தார்.

மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும்படி பொறுத்தமற்ற கேள்விகள் சிலதை ஒரு சிலர் முன்வைத்தனர், அதற்கு பிரதேச செயலாளர், பதிலளிக்கவில்லை, இறுதியாக சம்மேளனப்பிரதிநிதிகள், பிரதேச செயலாளரிடம் சட்டத்தை விட மனிதாபிமான அடிப்படையில் எமது பிரச்சினைகளை அணுகி மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.இதனை பிரதேச செயலாளர் அங்கீகரித்தார், அத்துடன் பொதுக்கூட்டம் இனிதே துஆவுடன் முற்றுப்பெற்றது.