2011 ஜூலை 03ம் நாள் இடம்பெற்ற பிரதிநிதிகள் சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் அங்கத்திவம் வகிக்கும் முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்த கவனயீர்ப்பு பிரேரணையொன்றினை 2011 ஜூலை 28 அன்று யாழ் மாநகர சபைக்கூட்டத்தில் முன்வைத்தனர்,அதன்போது
· மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கைகள் அமுலாக்கப்படவேண்டும்
· பிரதேச செயலாளரின் நிலைகளில், அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும், அல்லது அவர் மாற்றப்படவேண்டும்
· முஸ்லிம்களின் விவகாரங்களுக்கென முஸ்லிம் கிராம உத்தியோகத்தர் நியமிக்கப்படவேண்டும்
ஆகிய முக்கிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து,
சட்டத்தரனி எம்.எம்.எம்.றமீஸ், சகோதரர் அஷ்கர் ரூமி, சகோதரர் முஹம்மது முஸ்தபா சகோதரர் அஜ்மைன் அஸ்பர் ஆகிய முஸ்லிம் மாந்கரசபை உறுப்பினர்கள் சபையினை பகிர்ஷ்கரிக்க முடிவுசெய்துள்ளனர், மேற்படி முடிவினையும் அவர்களது பிரேரணையினையும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் வரவேற்று முழுமையாக ஆதரிப்பதுடன், சமூக நலன கருதி குறித்த நான்கு முஸ்லிம் மாநகரச்பை உறுப்பினர்களும் மேற்கொண்டுள்ள அர்ப்பனத்துடன் கூடிய துணிகர தீர்மானத்திற்காக அவர்களை பாராட்டுகின்றது, அத்தோடு சமூகநீதி வேண்டித்தொடரப்பட்டுள்ள இம்முயற்சியானது அரசியல் நலன்களுக்கு அப்பால் நோக்கப்படவேண்டும், இனத்துவ நோக்குடனும், இனமுரண்பாட்டு எண்ணங்களுடனும் இதனை நாம் நோக்க வேண்டியதில்லை அத்துடன் இது ஒரு குறித்த தனிநபருக்கெதிரானதோ அல்லது ஒரு சில அரச அதிகாரிகளுக்கெதிரானதோ அல்ல என்பதையும் இது அ ணுகுமுறைகளுக்கு எதிரானது என்பதையும் இந்த இடத்தில் நாம் ஞாபகமூட்டுகின்றோம், அத்தோடு குறித்த சமூகப்போராட்டம் சரியான இலக்குகளை அடைந்துகொள்ளும்வரை குறித்த மாநகரசபை உறுப்பினர்களின் முயற்சிக்கு சம்மேளனம் தனது முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்பதையும் பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்
வஸ்ஸலாம்
இவ்வண்ணம்
அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் (பொதுச்செயலாளர்-யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்)
No comments:
Post a Comment