Monday, April 11, 2011

யாழ், கிளிநொச்சி முஸ்லிம் ஒன்றியம் பொதுக்கூட்ட அறிக்கை பெப்ரவரி 2011


சம்மேளனத்தின் 2வது பொதுக்கூட்டம் 2011 பெப்ரவரி 05ம் நாள் சனிக்கிழமை மாலை 07.00 மணிமுதல் இரவு 10.30வரை ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

பொதுக்கூட்டத்தினை சம்மேளனத்தின் தலைவர் சகோ.தாஹிர் அவர்கள் தலைமைதாங்கி வழிநடாத்தினார், சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட 20 அங்கத்தினர்கள் சமூகமளித்திருந்த நிலையில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
ஆரம்பமாக ஒரு ஆன்மீக உரை சம்மேளனத்தின் செயலாளர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது அதில் ஒற்றுமையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
அடுத்து செயலாளரால் கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது, அதன்பின்னர் அறிக்கைமீதான கருத்துக்களுக்காக களம் திறக்கப்பட்டது, அப்போது அறிக்கையினை விடுத்து வெளியிலிருந்தும் ஒரு சில கருத்துகள் வந்ததோடு கூட்டத்திற்கு பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்தும் அறிக்கையில் எழுதப்படவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது, பின்னர் அது சார்ந்த விளக்கங்கள் தலைவர் அவர்களாலும் செயலாளரினாலும் சபையின் ஒரு சில உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டது அதன் முடிவில் திருத்தப்பட்ட அறிகையினை சபை அங்கீககரித்துக்கொண்டதாக சகோ. அல்-ஹாஜ் அமீன் அவர்கள் பிரேரிக்க சகோ.ஜினூஸ் அவர்கள் அதனை ஆமோதித்தார்.
(சபையோருக்கு அறிக்கையின் பிரதிகள் வழங்கப்பட்டன)
ஜனவரி மாத செயற்பாட்டறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது
ஜனவரி 01: பொதுக்கூட்டம்
ஜனவரி 03: அரசாங்க அதிபருடனான சந்திப்பு
ஜனவரி 11: விசேட நடமாடும் சேவை
ஜனவரி 13: அரசாங்க அதிபருடனான விசேட விரிவான சந்திப்பு
ஜனவரி 13: செயற்குழு ஒன்றுகூடல் மற்றும் திட்டமிடல் உப குழு நியமனம்
ஜனவரி 13: திட்டமிடல் உப குழு சகோ. அஸ்மின் அய்யூப், சகோ.முபீன்,சகோ ரமீஸ், சகோ.அமீன், சகோ அஜ்மல், சகோதரி ஷர்மிளா ஆகியோரைக்கொண்டு அமையப்பெற்றிருந்தது, குழுவிற்கு சகோ.ரமீஸ் தலைமை தாங்கினார். உபகுழுவின் முதலாவது ஒன்றுகூடல் ஜனவரி 13 அன்று இடம்பெற்றது.
ஜனவரி 19: திட்டமிடல் உபகுழுவின் இரண்டாவாது ஒன்றுகூடல் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எல்லா முஸ்லிம் வீடுகளையும் இழப்புக்களை மதிப்பீடு செய்வதற்காக அளத்தல் என்ற முடிவு பெறப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.
ஜனவரி 30: திட்டமிடல் உபகுழுவின் மூன்றாவது ஒன்றுகூடல் நீர்கொழும்பில் இடம்பெற்றது.
குறித்த உபகுழுவின் முடிவுகள் தீர்மானங்கள் குறித்து சம்மேளனத்தின் அங்கத்தினர்க்கு சரிவர தகவல்கள் பறிமாறப்படவில்லை என்ற கருத்து சபையில் தெரிவிக்கப்பட்டது, இதனை ஒரு தவறு என  திட்டமிடல் உபகுழுசார்பாக செயலாளர் ஏற்றுக்கொண்டதுடன் சபையில் அதனை பொறுத்துக்கொள்ளும்படியும் இனிவரும் காலங்களில் அவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு முயற்சிப்போம் என்றும் கூறினார்.
திட்டமிடல் உபகுழுவின் ஏற்பாட்டில் 2011 பெப்ரவரி 4,5,6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  முஸ்லிம் குடியிருப்புக்களை நஷ்டஈட்டுக்காக அளவீடு செய்யும் நடவடிக்கை இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஊழியர் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
அடுத்து சம்மேளனத்தின் ஸ்தாபக அமைப்புகள் 10ற்கும் கருத்துரைக்கான நேரம் வழங்கப்பட்டது.
ஜம் இய்யதுல் உலமா- கருத்துகள் எதனையும் கூற முன்வரவில்லை
தகவல் மற்றும் வழிகாட்டலுக்கான அமைப்பு- கருத்துகள் எதனையும் கூற முன்வரவில்லை
செடோ- கருத்துகள் எதனையும் கூற முன்வரவில்லை
ஜே.எம்.டீ.சீ பிரதிநிதிகள் சமூகமளிக்கவில்லை
ஜே.எம்.பீ.எப்- கருத்துக்களை அல்-ஹாஜ் அமீன் முன்வைத்தார்: அதன்போது தாம் ஜம் இய்யதுஸ்ஷபாபிப் அ னுசரனையோடு ஒஸ்மானியா கல்லூரி மாணவர்களுக்கு இலவச    சீருடைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஏற்கெனவே 20 பார்வைக் கோளாருள்ள மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்
ஜே.சீ.எஸ்.சீ- கருத்துக்களை சகோதரர் சுனீஸ் அவர்கள் முன்வைத்தார்: தமது அமைப்பின் சார்பாக 2011 ஜனவர் 11ஆம் நாள் இடம்பெற்ற நடமாடும் சேவைக்கு மக்களை அழைத்துவருவதில் தமது அமைப்பு காத்திரமான பங்களிப்புகளை நல்கியது என்றும், மக்கள் வந்தபடியால்தான் நடமாடும் சேவை சிறப்புற்றது என்றும் அது சபையோரால் பாராட்டி அங்கீகரிக்கப்படவேண்டும் என்று தெரிவித்ததோடு, அதற்கான போக்குவரத்து செலவினமாக 240,000.00 அமைந்தது என்றும் அதில் 200,000.00 ரூபாவினை தமது அமைப்பு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஒழுங்குபடுத்தியது என்றும் மிகுதமுள்ள 40,000.00 ரூபாவினை சம்மேளனம் பொறுப்பெடுத்து ஒழுங்குபடுத்தித் தரும்படியும் கேட்டுக்கொண்டு தனது கருத்துரையினை நிறைவு செய்தார்.
எஸ்.டீ.எஸ்- ஒஸ்மானியா கல்லூரி பிரதிநிதிகள் சமூகமளிக்கவில்லை
சிறீலங்கன் வே- கருத்துகள் எதனையும் கூற முன்வரவில்லை
டீ.என்.எம்.ஓ - கருத்துக்களை சகோதரர் எம்,ஜீ பஷீர் அவர்கள் முன்வைத்தார்
அதில் ஒற்றுமை குறித்த கருத்தானது மிகவும் வலியுறுத்தப்படவேண்டும் என்று கூறியதோடு சோனகர் தெருவில் அந்நியர்களுக்கு காணி விற்பது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
புத்தளம் வாழ் யாழ்/கிளி மக்கள் ஒன்றியம்- இது சார்பாக கருத்துக்களை சகோ. சியாத் அவர்கள் முன்வைத்தார், புத்தளத்தில் மீள் குடியேறும் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் விஷேட கவனத்திற்கு கொண்டுவருவதற்காக மஹஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்புதல் என்று தாம் தீர்மானித்துள்ளதாகவும், அ தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பிரதான ஜும் ஆப்பள்ளிவாயல்களுக்கான கருத்துக்கூறும் நேரம் வழங்கப்பட்டது.
பெரிய பள்லிவாயல்: கருத்துகள் எதனையும் கூற முன்வரவில்லை
மஸ்ஜித் முஹம்மதிய்யா; கருத்துகள் எதனையும் கூற முன்வரவில்லை
மொஹிதீன் பள்ளி மானிப்பாய் வீதி; சகோ.ஷரப் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார், நாம் ஒற்றுமை பற்றிப்பேசுகின்றோம் ஆனால் அது நடைமுறையில் இல்லை, நடமாடும் சேவை குறித்து எமக்கு தெளிவான விளக்கங்கள் தரப்படவில்லை,அது மட்டுமல்ல நான் கிளிநொச்சியில் 2009க்கு முன்னர் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட செய்திக்குறிப்பையும் ஒரு போட்டோவையும் வைத்துக்கொண்டு சம்மேளன அங்கத்தவர் சகோ. எஸ்.எம் சாலி என்னைப்புலி என்று அங்கும் இங்கும் கூறித்திரிகின்றார், அதுமட்டுமல்ல தான் ஒரு மானிப்பாய் வீதி மொஹிதீன் பள்ளியின் நிர்வாகி என்றும் கூறிக்கொள்கின்றார் இத்தகைய நடவடிக்கைகள் ஒற்றுமையை குலைக்கும் செயலல்லாவா இது குறித்து சம்மேளனம் கவனம் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.அத்தோடு தமது பள்ளியின் அறையொன்று சம்மேளன அங்கத்தவர் ஒருவரால் உடைக்கப்பட்டு அதற்கு பொலிஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்
மொஹிதீன் ஜும் ஆப்பள்ளி மொஹிதீன் பள்ளி வீதி: கருத்துக்களை கூற முன்வரவில்லை
பெரியகடை மொஹிதீன் ஜும் ஆப்பள்ளி: பிரதிநிதிகள் சமூகமளிக்கவில்லை
அடுத்து மாநகர சபை அங்கத்தினர்கான கருத்துக்கூறும் நேரம் வழங்கப்பட்டது, அதன்போது சகோதரர் அஸ்பர் அவர்கள் தற்போது மீள்குடியேறுவோர் சார்ந்து ஏராளமான நடைமுறைப் பிரச்சினைகள் இருக்கின்றன, கச்சேரியிலும் ஏனைய காரியாலயங்களிலும் அவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள் இவற்றை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் இதற்கான தீர்வுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

சோனகர் தெருவில் மாநகர சபை தலையிடவேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன, துப்புரவு சார்ந்த பிரச்சினைகள், இரும்புக் களஞ்சியங்களால் எழும் பிரச்சினைகள் என  ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றை நாம் கையாள முடியும், பொலிஸ் உடன் தொடர்புடைய விடயங்களும் இருக்கின்றன இவற்றுக்கு மாநகரசபை உறுப்பினர்களாகிய நாம் எமது பங்களிப்புகளைச் செலுத்த முடியும் எனவே நாம் ஒரு குழுவாக இயங்குவது பொருத்தம் என  நினைக்கின்றோம்.  வீட்டுத்திட்டங்கள், காணியற்றோரது பிரச்சினைகள் என  நாம் பல்வேறு மட்டங்களில் அரச  ஒழுங்குவிதிகளை அறிந்துகொண்டு செயலாற்ற முன்வர வேண்டும் என  தனது கருத்தை நிறைவு செய்தார்.
அடுத்து ஏனைய உறுப்பினர்களுக்கான கருத்துக்கூறும் நேரம் வழங்கப்பட்டது.
அதன்போது சகோதரர் நஜீப் அவர்கள் ஜனாஸா நலன்புரிச்சங்கத்தினை சம்மேளனத்தின் ஸ்தாபக அமைப்புகளுள் ஒன்றாக அங்கீகரிக்கவேண்டும் என்ற கருத்தை சபையில் முன்வைத்தார்.

சம்மேளனத்தின் நடைமுறையின் பிரகாரம் தற்போது மீள்குடியேற்ற செயற்திட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபடுகின்ற அல்லது ஈடுபடுகின்ற அமைப்புகளையே ஸ்தாபக அமைப்புகளாக ஏற்றுக்கொள்தல் என்றும் ஏனைய அமைப்புகளை சாதாரண அங்கத்துவ அமைப்புகளாக ஏற்றுக்கொள்ளமுடியும் என்றும் எல்லாத் துறைசார்ந்த அமைப்புகளையும் சம்மேளத்தின் ஸ்தாபக அமைப்பாக உள்வாங்க முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
அ தற்கு பதிலளித்த சபையோர் ஜனாஸா அமைப்பு மீள்குடியேற்ற செயற்திட்டத்துடன் நேரடியாக தொடர்புபடாவிட்டாலும், சமூகத்தில் ஒரு காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் அமைப்பாக செயற்படுகின்றது, பல்வேறு இக்கட்டான சந்தர்ப்பங்களில் குறித்த சங்கம் கைகொடுத்துள்ளது என்ற கருத்தை முன்வைத்தார்கள்,

அதுகுறித்து கலந்தாலோசித்த சபை- இறுதியாக ஜனாஸா நலன்புரிச்சங்கத்தினை சம்மேளனத்தின் ஸ்தாபக அமைப்புகளுள் ஒன்றாக அங்கீகரித்தல் என்ற தீர்மானித்தது. ( சபையின் மொத்த அங்கத்தவர்களுள் 50%ற்கும் அதிகமான அங்கத்தினர் முக்கியமான முடிவுகளின்போது இருத்தல் அவசியம்- ஆனால் குறித்த சபையில் 20 அங்கத்தினர்களே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

அடுத்து யுனைட்டட் ஸ்போர்ட்ஸ் கிளப்தம்மையும் சம்மேளனத்தின் அங்கத்தினராக ஏற்றுக்கொள்ளும்படி அனுப்பியிருந்த விண்ணப்பக்கடிதம் வாசிக்கப்பட்டது,
அதற்கு பதிலளித்த சபை: தற்போதைய நிலையில் விளையாட்டுக்கழகங்களை உள்வாங்குவது பொறுத்தமானதாக இருக்காது, அவ்வறு உள்வாங்க முற்பட்டால் ஏராளாமா விளையாட்டுக் கழகங்களை நாம் உள்வாங்க நேரிடும் எனவே குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை சபை எட்டியது.

அ டுத்து சகோ.சம்ஸூன் அவர்கள் தனது கருத்துறையில் சம்மேளனத்திற்கு யாப்பு ஒன்று உடனடியாக அவசியப்படுகின்றது, யாப்பு இருக்குமாயின் இவ்வாறான அங்கத்துவ விண்ணப்பங்களை சீர்செய்யமுடியும் என்ற கருத்தை முன்வைத்தார், இதற்கு சபையில் பரவலாக ஆதரவுக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன .

சகோதரர் ரவூப் அவர்கள் ஒரு முறைப்பாட்டினை சபையின் கவனத்திற்கு கொண்டுவதார், அதாவது முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள மதரஸா விவகாரத்தில் சகோ முபீன் தேவையில்லாத அமைப்பில் தலையிட்டு அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அதனை மீளவும் மதரஸா கமிட்டிக்கே பெற்றுத்தருமாறும் அவரது முறைப்பாடு அமைந்திருந்தது, அதன் எழுத்துவடிவம் சபையில் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்து சகோதரி சர்மிளா தனது கருத்துரையில் : புத்தளம் பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான மேலதிக சேவையினை வழ  ங்குவதற்காக மேலதிக ஊதியம் வழங்கப்பட்டது ஆனால் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது இதனைக்காரணம் காட்டி கிராம உத்தியோகத்தர்கள் எமது மக்களுக்கான சேவைகளை வழங்குவதில்லை இதனால் அதிக சிரமங்களை எமது மக்கள் எதிர்நோக்குகின்றார்கள், அதேபோன்று இந்திய வீட்டுத்திட்டம் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்தோடு தமது அமைப்பு 30 தற்காலிக வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அதற்கான பொது அல்லது தனிப்பட்ட காணிகளைப் பெற்றுத்தரும்படியும் சம்மேளனத்தை வேண்டிக்கொண்டார்

முடிவுகள் தீர்மானங்கள்:
·         ஜனாஸா நலன்புரி சங்கத்தினை சம்மேளனத்தின் அமைப்பாக அங்கீகரித்தல் அதன் பிரதிநிதியான  சகோ.நஜீப் சம்மேளனத்தின் செயற்குழுவிலும் அங்கத்துவம் வகிப்பார்.
·         சோனகர் தெருவில் காணிகள் விற்கப்படுகின்ற நிலைமையினை நிறுத்துவதற்கு உடனடியான செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துதல் வேண்டும், அதில் ஒரு கட்டமாக
o   மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
o   யாழ் மாவட்ட மக்களிடையே காணிகொள்வனவு குறித்து எச்சரிக்கையினை ஏற்படுத்தல்
o   காணித்தரகர்களுடன் கலந்தோசித்தல்
·         ஜே.சீ.எஸ்.சீ யுடைய 30 தற்காலிக வீடுகளை அமைப்பதற்கான செயற்திட்டத்துக்கு பொதுக்காணிகளை சகோ.நிபாஹிர், சகோ முபீன், சகோ.தாஹிர் மற்றும் சகோ.ஜாபிர் ஆகியோர் முன்னின்று பெற்றுக்கொடுப்பர் என  முடிவு செய்யப்பட்டது
·         முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள மதரஸா விடயமாக தலைவரும் செயலாளரும் உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்தல் என்று முடிவு செய்யப்பட்டது.
·         சமூக விவகாரங்களில் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் பொறுப்புணர்வுடனும், ஒழுக்கத்துடனும் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாதவண்ணமும் நடந்துகொள்ளவேண்டும் என  வலியுறுத்திக்கூறப்பட்டது
·         சம்மேளனத்தின் ஒழுக்கக்கோவையொன்றினை தயாரிப்பதற்கு பின்வருவோர் நியமிக்கப்பட்டனர்
o   சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் இணைப்பாளர் உள்ளடங்கலாக சட்டத்தரணி ரமீஸ், சகோ,அஜ்மல், சகோ ஜினூஸ் சகோ.சுனீஸ் மற்றும் மௌ.ரொஷான் (மதனி) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்
·         எம்.எப்.சீ.டி அமைப்பிற்கு யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்டங்களைவிட காணியற்றோரின் தேவைகளுக்கு முன்னுரிமை வ ழ ங்கும்படி சம்மேளனம் கடிதமொன்றினை அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது.
·         மீள்குடியேற்றம் சார்ந்தும் சம்மேளனம் சார்ந்தும் விழிப்புக்கூட்டங்களை யாழ்ப்பாணத்திலும் வெளிமாவட்டங்களிலும் நடாத்துதல் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பொறுப்புகளும் பகிரப்பட்டன
o   யாழ்ப்பாணம்: சகோ. சம்ஸூன்
o   புத்தளம்: ஜே.சீ.எஸ்.சீ, யாழ் கிளிநொச்சி ஒன்றியம், இணைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும்
o   நீர்கொழும்பு: செடோ
o   கொழுப்பு: ஜே.எம்.பீ.எப் மற்றும் சகோ.நஜீம்  
o   அனுராதபுரம்: சகோ.அஷ்கர், சகோ.ரொஷான்
·         கிளிநொச்சி சார் பிரதிநிதிகளும் சம்மேளனத்தில் உள்வாங்கப்படவேண்டும் தற்காலிகமாக சகோ,ஷரப் கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதியாக செயற்படுவார்
·         மௌலவி சுப்யானுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டு மீண்டும் அவரை சம்மேளனத்துடன் இணைப்பதற்கான முயற்சியொன்றினை மேர்கொள்தல் என்றும் தீர்மானிக்கப்பட்டது, இதற்கு சம்மேளனத்தின் அனைத்து அங்கத்தினரும் பங்கேற்றல் எனவும் தீர்மானிக்கப்பட்டது
·         யாழ் அரச  அதிபர் அவர்களின் அழைப்பின்பேரில் பெப்ரவரி 8ஆம் திகதி அரச  சார்பற்ற நிறுவனங்களுடனான சந்திப்பில் சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றல் என்று தீமானிக்கப்பட்டது.
·         யாழ் முஸ்லிம் சமூகத்தில் நிலவும் ஒழுக்கம் சார்ந்த விடயங்களை கவனிப்பதற்கு யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்- ஒழுக்காற்றுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது அதன் பிரகாரம் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் இணைப்பாளர் உள்ளடங்கலாக சகோ. நிபாஹிர், சகோ.அஷ்கர், சகோ. ஜஸ்ரின் சகோ. சம்சூன், சகோ. நிலாம் ஆகியோரையும் மற்றும் எல்லாப் பள்லிவாயல்களினதும் பேஷ் இமாம்களையும் உள்ளடக்கியதாக அக்குழு அமைக்கப்படுதல் சிறப்பானது எனத்தீர்மானிக்கப்பட்டது.
·         இறுதியாக அடுத்த பொதுக்கூட்டம் மார்ச் 05ஆம் திகதி சனிக்கிழமை ஒஸ்மானியா வளாகத்தில் கூட்டப்படும் என்ற முடிவோடு பெப்ரவரி 05ஆம் நாள் பொதுக்கூட்டம் துஆவுடன் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment