காலம் : 01-01-2011 சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 வரை
இடம் : ஒஸ்மானியா கல்லூரி- யாழ்ப்பாணம்
கலந்துகொண்டோர்: 30 பதிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்
ஆரம்ப உரை
நிகழ்வுகள் ஒரு ஆன்மீக உரையுடன் ஆரம்பமாகியது. ஆரம்ப உரையில் கூட்டமைப்பு அல்லாஹ்வின் பார்வையில் எவ்வாறு அமைகின்றது என்றும் அது பரகத் பொருந்திய ஒன்று என்பதாகவும் செய்த்தானியத்தின் தூண்டுதல்களுக்கு நாம் அடிமைப்பட்டுவிடக்கூடாது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன உரையினை அமைப்பின் செயலாளர் மேற்கொண்டார்.
அவைத் தலைவர் தெரிவு
நிகவின் முதலாவது விடயமாக அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான அவைத்தலைவர் தெரிவு இடம்பெற்றது, சகோ.எம்.யூ.எம் தாஹிர் அவர்களது பெயரை அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவராக சகோதரர் முபீன் அவர்கள் பிரேரித்தார்கள் அதனை சகோதரர் நிபாஹிர் அவர்கள் வழிமொழிந்தார்கள். வேறு தெரிவுகளுக்கான அவகாசம் ஒதுக்கப்பட்டபோதிலும் வேறு எவரது பெயரும் பிரேரிக்கப்படவில்லை.
கூட்டமைப்பிற்கான பெயர் தெரிவு
பல பெயர்கள் முன்மொழியப்பட்ட போதிலும் அமைப்பின் நோக்கம் அது செயலாற்றவுள்ள சூழல், தேவைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு அதனது பெயர் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டதற்கு இணங்க “முஸ்லிம் சம்மேளனம்” என்ற பெயர் பொருத்தமானதாக அவையோரால் தீர்மானிக்கப்பட்டது, அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்துடன் கிளிநொச்சியும் இணைக்கப்படவேண்டும் என்ற பரவலான வேண்டுகோலுக்கிணங்க, பெயர் “யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் சம்மேளனம்” என்று தீர்மானிக்கப்பட்டது (Jaffna/Kilinochchi Muslim Federation -JKMF)
கூட்டத்தொடர்களுக்கான கால நிர்னயம்:
முதல் வரும் 6 மாதங்களுக்கான கூட்டத்தொடர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வார சனிக்கிழமைகளில் காலை 10.00 மணிமுதல் யாழ் மாவட்டத்தில் இடம்பெரும்.அதன் பின்னர் கூட்டத்தொடர்களுக்கான கால நிர்ணயம் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கலந்துறையாடப்பட்ட விடயங்கள்
- மீள்பதிவு
“மீள்பதிவு” என்ற விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முதன்மை அம்சமாகும்.
மேற்படி விடயத்தில் பல்வேறு கருத்துகள் அங்கத்தவர்களால் முன்வைக்கப்பட்டது. அதன்பிரகாரம் அது பின்வரும் ஒழுங்கில் தொகுத்து நோக்கப்பட்டதுடன் பொருப்புகளும் பகிரப்பட்டது.
- மீள்பதிவு குறித்த விழிப்புணர்வை வெளி மாவட்டங்களில் வாழுகின்ற யாழ்/கிளிநொச்சி மக்களிடையே ஏற்படுத்துதல்
- போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்தல்
- யாழ்ப்பாணத்தில் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்தல்
- பதிவிற்கான ஒழுங்குகளை மேற்கொள்தல்
- மேலதிக தேவைகளை ஒழுங்குபடுத்துதல்
போன்ற 5 பிரதான விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது.அதன் பிரகாரம் பின்வரும் ஒழுங்கில் பொருப்புகள் பகிரப்பட்டன
மீள்பதிவு குறித்த விழிப்புணர்வை வெளி மாவட்ட வாழ் யாழ்/கிளிநொச்சி மக்களிடையே ஏற்படுத்துதல் இவ்விடயத்துக்கு மௌலவி அப்துல் மலிக் பொறுப்பாக செயல்படுவார். பொதுவான அறிவித்தல் கடிதம் ஒன்று அமைப்பின் கடிதத்தலைப்பில் எல்லா முகம்கள், யாழ் முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேச பள்லிவாயல்களுக்கும் அனுப்பபடும்.
- புத்தளம், சிலாபம்,அநுராதபுரம், கல்பிட்டி, புளிச்சாங்குளம் போன்ற பகுதிகளுக்கு மௌலவி அப்துல் மலிக் தலைமையில் விழிப்புனர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- நீர்கொழும்பு செடோ அமைப்பினால் விழிப்புனர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- மத்திய மாகாணம் – சகோ.லாபிர் அவர்களால் விழிப்புனர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- கொழும்பு சகோ.நஜீம், மௌலவி அஸ்மின் அய்யூப் ஆகியோரால் விழிப்புனர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இதர பகுதிகளுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் விஸ்தீரனப்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
போக்குவரத்து ஏற்பாடுகளை அமைச்சர் ரிஸாத் பதியுத்தீன் மூலமாக சகோதரி.சர்மிலா மேற்கொள்வார் என அறியக்கிடைத்தது.
யாழ்ப்பாணத்தில் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்வதற்காக சகோதரர் நிபாஹிர் அவர்களின் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது அக்குழுவில் சகோ. எஸ்.எம் ஜாபிர், சகோ.ஜஸ்ரின், சகோ.சாலி, சகோ ஜமால், சகோ.நஜீம், சகோ நிலாம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
பதிவிற்கான ஒழுங்குகளை மேற்கொள்தல் என்ற விடயத்தை சட்டத்தரணி ரமீஸ், சகோ முபீன் ஆகியோருடன் ஏனைய முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்களும் இணைந்து மேற்கொள்வார்கள் என முடிவு செய்யப்பட்டது
மேலதிக தேவைகளை ஒழுங்குபடுத்துதல் போன்ற விடயத்திற்கு சகோ, தாஹிர் அவர்களும் ஏனைய மாநகரசபை உறுப்பினர்களும் இணைந்து செயற்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சனசமூக நிலையம்
யாழ் முஸ்லிம் பிரதேசத்தில் அமைந்துள்ள நூலகம் மற்றும் சனசமூக நிலையம் என்பன மீண்டும் மாநகர சபையினால் குத்தகைக்கு விடப்படவுள்ளது எனவும், அதனை மேற்படி அமைப்பினூடாக நாம் பெற்று யாழ் முஸ்லிம்களின் பொதுத்தேவைகளுக்காக பயன்படுத்தமுடியும் என்ற கருத்து சபையில் தெரிவிக்கப்பட்டது, அதனை கருத்தில் எடுத்தொக்கொண்ட அமைப்பின் பிரதிநிதிகள் பின்வரும் முடிவை எட்டினார்கள்
அமைப்பினூடாக நூலக விவகாரம் தொடர்பாக மேயருக்கு கடிதம் மூலம் விண்ணப்பிப்பதோடு அதன் பிரதிகள் முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும், முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்கள் மேற்படி விடயத்தை மேயருடன் கதைத்து ஒழுங்குபடுத்துவர்.
செயலகம்
யாழ்ப்பாணம் முஸ்லிம் பிரதேசத்துடன் தொடர்புடைய 4 கிராம நிலதாரிகளுடனும் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் சகோ.ஜினூஸ் அவர்களுடைய நேரடிக் கண்காணிப்புடன் ஒரு செயலகம் சோனகதெருவில் ஏற்படுத்தப்படும் அதில் முழுநேர ஊழியர் ஒருவர் நியமிக்கப்படுவார்,மேற்படி விடயத்தை செடோ அமைப்பு முன்னெடுக்கும் என கருத்துக் கூறப்பட்டது, இதனை சபை அங்கீகரித்துக்கொண்டது.
கடிதத்தலைப்பு
சம்மேளனத்திற்கான கடிதத்தலைப்புகளை சகோ.முக்தார் பெற்றுத்தருவதாக முடிவு செய்யப்பட்டது
நிதி விவகாரம்
அமைப்புக்கு நிதி சார்ந்த தேவைகள் இருக்கின்றன என்றும் அது குறித்து நாம் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் சகோ.முபீன் தெரிவித்தார், இருப்பினும் சபையினரின் கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது, எமது கூட்டமைப்பில் ஸ்தாபக அமைப்புகள் இருக்கின்றன அவை நிதி சார்ந்த விடயங்களை தனித்தனியே சுயாதீனமாக மேற்கொள்கின்றன, அமைப்பினால் முன்வைக்கப்படக்கூடிய விடயங்களையும் அத்தகைய அமைப்புகளினூடாக மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும், அது தவிர பொதுஅமைப்புக்கென தேவைகள் ஏற்படுமிடத்து அவற்றினை சபையோரிடம் தெரிவித்து தனிப்பட்ட அமைப்பில் உதவிகளாகப் பெற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய அங்கத்துவங்கள்
“பிளவுஸ் ஹாஜியார் பவுண்டேஷன்” யாழ் முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செயல்படும் ஒரு அமைப்பு என்பதாகவும் அவர்களும் குறித்த சம்மேளனத்துடன் இணைந்துகொள்வதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர், மேற்படி விண்ணப்பத்தை சபை அங்கீகரித்துக்கொண்டது.
“ஒஸ்மானிய பழைய மாணவர் சங்கம்” சார்பில் தம்மையும் குறித்த சம்மேளனத்துடன் இணைத்துக்கொள்ளும்படி ஒரு பிரதிநிதி அனுப்பிவைக்கப்பட்டிருந்தார், அவர் பழைய மாணவர் சங்கம் சார்பில் தமது கருத்தை தெரிவித்ததுடன் தம்மையும் இணைத்துக்கொள்ளும்படி கேட்டிருந்தார், இதற்கு பதிலளித்த
அவைத்தலைவர் சகோ.சியானாஸ்: பழைய மாணவர் சங்கம் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாண சமூகத்தின் மீள் குடியேற்ற செயற்திட்டத்தில் அவர்கள் எவ்வித பங்களிப்பையும் வழங்கியிருக்கவில்லை எனவேதான் அவர்களை நாம் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் எடுத்திருக்கவில்லை,இன்வரும் காலங்களில் அவர்களது செயற்பாடுகள் சீரானதாக அமையுமிடத்து அவர்களை இணைத்துக்கொள்வதில் எமக்கு கருத்து முரண்பாடு இல்லை என்ற கருத்தை தெரிவித்தார்.
செயலாளர் அவர்கள் தமது பதிலுறையில்: ஒஸ்மானிய பழைய மாணவர் சங்கம் என்ற விடயத்தில் பலரும் உரிமை கோருகின்ற அமைப்பு இருக்கின்றது, 3அமைப்புகள் பழையமாணவர் அமைப்புகள் என தம்மை அடையாளப்படுத்துகின்றன, எனவே சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே அவர்களது அங்கத்துவம் ஒத்திவைக்கப்பட்டது இனிவரும் காலங்களில் குறித்த சிக்கல் நிலை நிவர்த்திக்கப்படுமாயின் அவர்களை உள்வாங்கிக்கொள்வதில் பிரச்சினைகள் இருக்காது என்று தெரிவித்தார்.
எனவே முடிவாக ஒஸ்மானிய பழைய மாணவர் சங்கம் சார்ந்து இருக்கின்ற சிக்கல்நிலை நிவர்த்திக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக, யாழ் மாவட்டத்தில் அது செயற்படுகின்றபோது அவ்வமைப்பையும் உள்வாங்கிக்கொள்ளமுடியும் அ துவரை அவர்களை உள்வாங்கிகொள்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்ற தீர்மானம் பெறப்பட்டது.
தனிநபர் அங்கத்துவம்
சக்கோதரர் ரஜுமான் (075-7031481) மாபோள பகுதி யாழ் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக விண்ணப்பித்திருந்தார், அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அமைப்பு குறித்து அறிவித்தல்கள்
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அமைப்பின் பிரகாரம் யாழ் முஸ்லிம் பிரதேசத்தில் ஒரு பலமான கூட்டமைப்பாக நாம் செயல்படவிருக்கின்றோம், எனவே இவ்வமைப்பை இப்போது மக்களுக்கும் ஏனையோருக்கும் பகிரங்கப்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கின்றது என்ற கருத்தை சட்டத்தரணி ரமீஸ் அவர்கள் முன்வைத்தார்கள் அதனை ஏற்றுக்கொண்ட சபை ஆரம்பமாக கடிதம் மூலம் விடயத்தை அறிவித்தல் என்ற தீர்மானத்தை எட்டிக்கொண்டது.
No comments:
Post a Comment