“யாழ் முஸ்லிம் 2020”
மாநாட்டின் விபரங்கள்
காலம்: 2010 டிசம்பர் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
நேரம்: அமர்வு 1: காலை 8.00 மணிமுதல் 12.30 வரை
அமர்வு 2: பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை
இடம்: பல நோக்கு கூட்டுறவு மண்டபம் (கே கே எஸ் வீதி)
எமது அன்புக்கும் மதிப்பிற்குமுரிய யாழ் முஸ்லிம் சமூகப்பிரதிநிதிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இம்மடல் உங்கள் கரம் கிட்டும் வேளையில் பூரண தேகாரோக்கியத்துடனும், முழுமையான ஈமானிய உணர்வுடனும் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றோம்.
யாழ் சமூக அமைப்புகள். சமூகப்பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்
எமது சமூக அமைப்பில் மாறாத வடுவை ஏற்படுத்திய 1990 வெளியேற்றமும், அதனைத்தொடர்ந்த காலத்தில் எமது அசையும் அசையாத சொத்துக்களின் சூறையாடலும் எமது சமூகத்தை ஒரு நிர்க்கதியான நிலைக்குத் தள்ளியது.2008 யுத்த நிறைவோடு இடிபாடுகளுக்கிடையிலிருந்தும் அழிவிலிருந்தும் மீளவும் எழவேண்டிய சமூகமாக நாம் இருக்கின்றோம்.
இக்காலப்பகுதியும் இக்காலத்தில் எமது சமூகத்திற்கான வேலைத்திட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.
தோழர்களே! நாம் எவரும் எமது சமூகத்தின் அழிவிற்காக இயங்குவதில்லை, ஏதோ ஒரு விதத்தில் எமது சமூகத்தை உயர்த்தும் எண்ணமே; எம் அனைவரினதும் எண்ணமாகும். எமது எண்ணங்களுக்கும் நற்செயல்களுக்கும் அல்லாஹ்வே கூலித்தரப் போதுமானவன். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் செய்த்தானின் உந்துதல்கள் துரதிஷ்டவிதமாக எமக்கிடையே முரண்பாடுகளையும் பகைமையுணர்வையும் ஏற்படுத்திவிடுகின்றது.எனவே இத்தகைய முரண்பாடுகளுக்கு அப்பால் நாம் இணைந்து செயற்படவேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.
இதுவரை எமக்குள் நடந்தவற்றை பரஸ்பரம் மன்னித்துக்கொள்வோம்…
இதுவரை எமக்கிடையே போடப்பட்டிருந்த திரைகள் கிழியட்டும்…
ஒரு புதிய நோக்குடன் அனைவரையும் சமமாக மதிக்கின்ற ஏற்றுக்கொள்கின்ற நிலையில், எல்லோரது வேலைத்திட்டங்களும் எமது சமூகத்தை மேம்பாடுத்த அத்தியாவசியமானது என்ற மனோநிலையுடன், அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் செயற்படுவோரைத்தவிர வேறு எந்தக் காரணிகளாலும் நாம் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்துவிடமுடியாது; என்ற இஸ்லாத்தின் அடிப்படையான எண்ணத்தை எமக்குள் சுமந்துகொண்டவர்களாக, நாம் அணிதிரள்வோம். இன்ஸா அல்லாஹ்.
எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாண முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புகளையும் தனிநபர்களையும் ஒருங்கிணைக்கும் விசேட ஒரு நாள் மாநாட்டிற்கு உங்களையும் அன்போடு அழைக்கின்றோம்.
குறித்த மாநாட்டில் யாழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கு தலா 10-15 நிமிட நேரம் அவர்களது அமைப்புக் குறித்தும் அவர்களது யாழ்ப்பாண சமூகத்தை நோக்கிய திட்டங்கள் குறித்தும் சபையோருக்கு விளக்கமளிக்கவென வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட தனிமனிதர்களுக்கு 5-10 நிமிடமும் வழங்கப்படும். எனவே இதற்குரிய சரியான தயாரிப்புகளுடன் தாங்கள் சமூகம் தருவீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
மேற்படி நிகழ்விற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் பிரதி நிதிகள், இலங்கை தப்லீக் ஜமாஅத்தினரின் பிரதிநிதிகள் இலங்கை தௌஹீத் அமைப்பின் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று தலைமைத்துவத்தையும் வழிகாட்டல்களையும் வழங்கவிருக்கின்றனர். அத்தோடு யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தோடு நெருங்கி கடமையாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மேற்பார்வையாளர்களாகவும் கலந்துகொள்வர் என்பதை கருத்தில் கொள்ளவும்.
ஏற்பாட்டுக்குழு
· அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி) (0770-525 391)
· சகோ.எம்.எம்.எம்.றமீஸ் (சட்டத்தரணி) (0777-805 399)
· சகோ.எம்.எம்.எம். அஜ்மல் – (0772-272 742)
· சகோ.எம்.எஸ்.எம் ஜினூஸ் (கிராம நிலதாரி) (0772-272 742)
· சகோதரி எம்.எச்.ஸ ர்மிலா (0776 674 795)
· சகோதரர் நிபாகிர்
· சகோ.பாயிஸ்
· சகோதரி எம்.பதீலா
No comments:
Post a Comment