யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெரு (பொம்மைவெளி) பகுதியில் அமைந்திருக்கும் மஸ்ஜித் அபூபக்கர் 1990 வெளியேற்றத்தின் பின்னர் வெகுவாக சிதைவடைந்திருந்தது. தற்போதைய சமாதான சூழலில் யாழ் முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளவும் குடியேறிவருகின்றனர், குறிப்பாக பொம்மைவெளி பகுதியில் அதிகமான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர். இந்நிலையில் மஸ்ஜித் அபூபக்கர் திருத்தியமைக்கப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டது. இவ்வேண்டுகோளுக்கிணங்க சவுதி அரேபியாவை சேர்ந்த சகோதரர் அஹ்மது வுஹைபி அவர்களுடைய தனிப்ப்பட்ட நிதியொதுக்கீட்டில் மேற்படி பள்ளிவாயல் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி முயற்சிகள் துரிதமாக நிறைவடைய அனைவரது ஒத்துழைப்புகளையும் பிரார்த்தனைகளையும் எதிர்பார்க்கின்றேம்.
No comments:
Post a Comment