கிராம சேவையாளர்கள் 114, எழுது வினைஞர்கள் 225, எழுதுவினைஞர் (சுப்றா) 12, நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்கள் 16, அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்கள் 04, மொழிபெயர்ப்பாளர்கள் 23, அலுவலக உதவியாளர்கள் 128, வாகனசாரதிகள் 11, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 18, பொறியியலாளர்கள் 11, எஸ்.எல்.ஏ.ஏஸ். பதவிநிலை உத்தியோகத்தர்கள் 07 ஆகிய வெற்றிடங்கள் தற்போது உள்ளன.
இவையனைத்தும் யாழ். மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்களங்களிலும் காணப்படும் வெற்றிடமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று கேட்டதற்கு, இந்த வெற்றிடங்கள் தொடர்பாகப் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் . அவர்கள் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment